உலக எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தாகீர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மூலம் உலக எய்ட்ஸ் தின விழா நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் தலைமையேற்று விழிப்புணர்வு குறித்த ரங்கோலியினை பார்வையிட்டு, விழிப்புணர்வுக்கான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் மேலும் அலுவலர்கள், பணியாளர்கள் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தினம் 2024 க்கான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அனைவரும் உடனான சமபந்தி போஜனத்தில் பங்கேற்றார்.



