கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய தமிழக திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.வி.பாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் என்.ரெங்கநாதன், சந்திரமோகன், ம.சக்தி, மாவட்ட பொருளாளர் வானகிரி செல்லதுரை, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கோமல் அன்பரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார்.
எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நாஞ்சில் கார்த்தி உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.