வேலூர்_18
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவி (40) அவர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டு வீட்டிற்கு திரும்பி அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் அண்ணா சாலையில் உள்ள தெற்கு காவல் நிலையம் எதிரே வந்து கொண்டிருக்கும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்
அப்போது எஸ்பி.எல்.டி என்ற தனியார் தொழிற்சாலை பேருந்து சக்கரத்தில் சிக்கி தேவி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்
இது குறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெண் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது