சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக, வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதனால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும் என்றும், ரயில் சேவையின் தரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தியன் ரயில்வேக்கு என தனி அடையாளம் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று. இந்தியன் ரயில்வே ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி பயணிகளை கையாள்கிறது. இதுவே தெற்கு ரயில்வேயை எடுத்துக்கொண்டால் சுமார் 20 கோடி பயணிகளை இது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. மொத்தமாக 850 பயணிகள் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இது,
சென்னை,
மதுரை,திருச்சி,சேலம்,
திருவனந்தபுரம்,பலக்காடு என 6 மண்டலங்களை கொண்டிருக்கிறது. இதில் திருவனந்தபுரம் மண்டலத்தில் வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டிற்குள் இது இருக்கிறது. இருந்தாலும் திருவனந்தபுரம் மண்டலம்தான் இதை நிர்வகிக்கிறது. இந்தியன் ரயில்வேயில் இது சாதாரணமான விஷயம்தான்.
நாகர்கோவிலிருந்து சென்னையிலிருந்து பல எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் குறைந்தபட்ச பயண நேரம் 11.22 மணி நேரம். இங்குதான் வந்தே பாரத் ரயில் என்ட்ரி கொடுக்கிறது. இந்த ரயில் வெறும் 8.50 மணி நேரத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவிலை ரீச் ஆகிவிடுகிறது. எனவே இந்த ரயிலுக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்து. பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதல் பெட்டிகள் தேவைப்பட்டன.இதனையடுத்து வரும் 8ம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. அதன்படி இனி 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு தென் மாநில ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கெனவே சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, திருவனந்தபுரம் – காசர்கோடு வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.