ஈரோடு, செப். 5
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஈரோடு நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உயிர் தொழில்நுட்பத்துறை உடன் திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இனைந்து போதை பொருள்களின் விளைவுகளும் அதிலிருந்து மீளும் வழிமுறைகளும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புகையிலை கட்டுபாட்டு அலுவலர் முனைவர் கலைச்செல்வி கலந்து கொண்டு பல்வேறு புகையிலை பயன்படுத்துவதன் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார். அதனால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி மாணவர்களுக்கு விரிவாக விளக்கி பேசினார்.
இதனை தொடர்ந்து திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புகையிலை கட்டுபாட்டு சமூக அலுவலர் முனைவர் சங்கீதா புகையிலை மற்றும் பல்வேறு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை பற்றியும் அதிலிருந்து மீண்டு வரும் வழிமுறைகள், மீள்வதற்கான காலம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்றார். துறை தலைவர் முனைவர் சரவணன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் வேணுகோபால், தியானேஸ்வரன், மோகனப்ரியன், தாரணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாணவி சர்மிளா நன்றி கூறினார்.
இதன் பிறகு அனைவரும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.