திருப்புவனம்
திரையுலக சூப்பர் ஸ்டாராக போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மணலூரில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர் இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.