காஞ்சிபுரம் மே 14
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுரவு மையக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மனைவி சரஸ்வதி கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில் தான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன்,
தனக்கு சொந்தமான கிராம நத்தம் வீட்டு மனையில் ஓட்டு வீடு கட்டி வசித்து வருகிறேன்,
அந்த ஓட்டு வீடிற்கு திருப்பெரும் புதூர் வட்டாட்சியரால் 2019 ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கபட்டது.
அதன் பிறகு அந்த ஓட்டு வீடு இடிந்து விட்டதால் தன் மகன் ஜெயக்குமாருடன் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வருவதாகவும், தன் பட்டா இடத்தில் ஓட்டு வீடு இருந்ததை பிரித்த பிறகு தன் வீட்டுமனை காலியாகவே இருந்தது.
அதனை பக்கத்து வீட்டை சார்ந்த அரசு பணியாளராக வேலை செய்யும் சங்கீதா வெங்கடேசன் குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டிக்கொண்டு தனது வீட்டுமனையில் அத்துமீறி போர்டிகோ கட்டியுள்ளார்,
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் இது வரை எனது புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் தனது வீட்டுமனையை அளந்து நான்கு பக்க எல்லையை குறித்து கல்நெட்டு தரக்கோரி ஆன்லைன் மூலமாக பணம் கட்டி தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்ததன் பேரில் சர்வேயர்,விஏஓ அலுவலக உதவியாளர் ஆகியோர் வீட்டுமணியை அளக்காமல், கவுன்சிலர் அலுவலகத்தில் தன்னை வரவைத்து சமாதானம் பேசி தன் பட்டா இடத்தை பாதி வீட்டுமனையை சங்கீதா வெங்கடேசன் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், அவரது பெயரில் பட்டா உள்ளது. என்றும் கூறி என்னை மிரட்டுகிறார்கள் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் பெயரில் உள்ள பட்டாவை வேறு நபர்களுக்கு எப்படி பட்டா கொடுக்க முடியும் என்றும்,அரசு வேலை செய்யும் சங்கீதா வெங்கடேசன் அவர்களுக்கு மண்டல வட்டாட்சியர் எப்படி பட்டா கொடுத்தார், என்று விசாரணை செய்து தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எனவும் அவர் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.