நாகர்கோவில் ஏப் 18
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே அடகு வைத்த நகையை திருப்புவதற்காக நிதி நிறுவன அதிபர் கொடுத்த ரூ.12 லட்சத்தை அப்படியே வாங்கிக் கொண்டு வாலிபர் ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் அரங்கேறி இருக்கிறது.இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே அடகு வைத்த நகையை திருப்பிக்கொண்டு வா என்று நிதி நிறுவன அதிபர் கொடுத்த ரூ.12 லட்சத்தை அப்படியே வாங்கிக் கொண்டு வாலிபர் ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-குமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் நாகர்கோவில் பகுதியில் பழைய நகைகளை மீட்டு விற்பனை செய்யும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் கண்ணன் தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ஆளூர் தோப்புவிளையை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் சுதர்சன் (24) என்ற வாலிபர் பேசியுள்ளார்.அப்போது அவர் தனது 196 கிராம் எடை கொண்ட நகைகள் அடகில் இருப்பதாகவும், அதை மீட்டு விற்பனை செய்ய ரூ.12 லட்சம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பேரில் கண்ணனும் ரூ.12 லட்சம் பணத்துடன் ஆளூர் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வெளியில் சுதர்சன் நின்றுகொண்டு இருந்தார். அவரை பார்த்ததும், பணத்தை பிடியுங்கள் எனது டூவீலரை அங்கு பார்க் செய்து விட்டு வருகிறேன் என்று கண்ணன் கூறிவிட்டு சென்றார்.இதையடுத்து டூவிலரை பார்க் செய்துவிட்டு, வங்கிக்கு வந்து பார்த்த போது சுதர்சனை காணவில்லை. இதனால் பதறிப்போன கண்ணன் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் சுதர்சன் பெங்களூர் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குமரி மாவட்ட ரயில் நிலையத்தில் சுதர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ. 12 லட்சம் பணத்தில் ரூ.2 லட்சத்தை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதாகவும், ரூ.20 ஆயிரத்தை பெங்களூரில் செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து மீதி பணத்தை சுதர்சனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.