மார்த்தாண்டம், மே. 19-
நித்திரவிளை அருகே பூத்துறை பாலப்பகுதியில் நேற்று இரவு வேளையில் ஒரு ப்ரீசர் வாகனம் வந்தது. திடீரென அதில் இருந்து மீன் கழிவுகளை கொட்டியது. அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பொதுமக்கள் டெம்போவை, டிரைவருடன் மடக்கி பிடித்து நித்திரவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ப்றீசர் வாகனத்தை பறிமுதல் செய்த நித்திரவிளை போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து வாகன டிரைவர் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சார்ந்த ராஜன் (39),
கிளீனர் பூத்துறை, கூட்டப்பனை வளாகம் பகுதியை சார்ந்த கிங்சலின் ஸ்டீபன் (40)
ஆகியோரை கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர்.