கன்னியாகுமரி நவ 02
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழி கழிவு, மற்றும் மருத்துவ கழிவு கொண்டுவரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் படி நேற்று களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கோழி கழிவு எற்றிவந்த வாகனத்தை பறிமுதல் செய்து களியக்காவிளை காவல் நிலையத்தில் 123, 271,272, BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கோழி கழிவுகளை ஏற்றி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோழி கழிவு மற்றும் மருத்துவ கழிவு கொண்டுவரும் வாகனங்கள் மீதும், அதன் உரிமையாளர் ஓட்டுநர்கள் மீதும் இந்நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.