மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் .கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொண்டர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் தரங்கம்பாடியை அடுத்த
டி- மணல்மேடு ஊராட்சியில் இருந்து 50-க்கு மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செல்வமணி, மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர்,தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மருது,தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ், நத்தம் வின்சென்ட் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் அப்துல் மாலிக் மங்கை சங்கர், ராஜா, இளையபெருமாள் , இமைய நாதன், வைத்தியநாதன், செல்ல சேர்த்து ரவிக்குமார், பஞ்சு குமார், அரசு வழக்கறிஞர் சேயோன், தரங்கை பேரூராட்சி செயலாளர் முத்துராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.