தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணியம் பாடி ஊராட்சி தலைவராக மஞ்சுளாவும், துணைத் தலைவராக ராசாத்தியும் உள்ளனர். ஊராட்சி தலைவர் மஞ்சுளாவின் செயல்பாடுகளை கண்டித்து, துணைத் தலைவர் ராசாத்தி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும் போது ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் என்னிடம் விசாரணை நடத்தாமல் என்னை தகுதி நீக்க செய்துள்ளனர். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். இதை எடுத்து அவரை கலெக்டரின் மனு அளிக்க போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரியிடம் மனு அளித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மணியம் பாடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசாத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவு- செலவு கணக்கு கையெழுத்து போடவில்லை என்ற தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அவருடைய செக் பவர் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தகுதி நீக்க செய்யப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். தகுதி நீக்க செய்துவிட்டதாக கூறி பெண் ஊராட்சி மன்றத் துணை தலைவர் தீ குளிக்க முயன்றதால் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உள்ளாட்சிஅமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகின்ற 31- ஆம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



