மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள டார்கெட் சில்வர் ஜூப்ளி தனியார் பள்ளியின் 9 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.கே.ராஜி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து எஸ்.இளம்வழுதி ஒலிம்பிக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் கலை உணர்வு மிக்க பரதம், நினைவாற்றலை மேம்படுத்துதல், கராத்தே, சிலம்பம் மற்றும் தேசிய விளையாட்டான சதுரங்கப் போட்டியை மாணவர்கள் ராஜா, ராணி, மந்திரி, குதிரை, யானை, சிப்பாய்கள் போன்று வேடமடைந்து வந்து நாடகம் மூலம் விளக்கியது அனைவரையும் கவர்ந்தது. மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பள்ளித் தலைவர் மற்றும் தாளாளருமான மோகன்ராஜ், துணைத்தலைவர் சட்டைநாதன், செயலர் ராமதுரை, பொருளாளர் செந்தில்குமார், இயக்குனர்கள் சிவலிங்கம், சந்திரசேகரன், விக்னேஷ்வர், மீனாமோகன்ராஜ், பாலாஜி, பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராஜ்குமார், துணைத் தலைமை ஆசிரியர் புகழேந்திரன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.