மதுரை ஆகஸ்ட் 23,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்காக சிறப்பு வார்டு தயார்
ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்தவமனையில் குரங்கம்மை நோய்க்கு சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இங்கு 20 படுக்கை வசதிகளுடன், குரங்கம்மை நோய்க்கான தடுப்பு மருந்துகள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவும் தயார் நிலையில்
வைக்கப்பட்டது. இங்கு 20 படுக்கை வசதிகளுடன், குரங்கம்மை நோய்க்கான தடுப்பு மருந்துகள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவும் தயார் நிலையில் உள்ளது. மதுரை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுரு கூறியதாவது: குரங்கம்மை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மதுரை விமான நிலையத்தில் மருத்துவர் குழு முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியா, காங்கோ, உள்பட ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடந்த 21 நாட்களுக்குள் சென்று வந்தவர்களுக்கு மங்கி பாக்ஸ் காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 17 முதல் தற்போது வரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் இதுவரை யாருக்கும் மங்கி பாக்ஸ் அறிகுறி கண்டறியப்படவில்லை என மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் டாக்டர் குமரகுரு தெரிவித்துள்ளார்.