அரியலூர், ஜூன்:20
அரியலூர் மாவட்டத்தில் திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நடத்துவதற்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களை ஒருங்கிணைத்து முகாம் நடத்தப்பட உள்ளதால் திருநங்கைகள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 21.06.2024 நாளை திருநங்கையருக்காக நடைபெறும் சிறப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


