திருப்பத்தூர்:ஜன:24, திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னூர் மற்றும் செங்கிலிகுப்பம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர். அ.செ.வில்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகமும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனமும் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார். மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம், ஆம்பூர் வட்டாட்சியர் சி.ரேவதி, மற்றும் மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர்.தரணி மற்றும் ஆம்பூர் தனி வட்டாட்சியர். மகாலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர்.அமீன் ஆ. நித்தியானந்தம், நடராஜன் யமுனா, மகேந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்ள்ளாட்சி பிரதி நிதிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.