நாகர்கோவில் – நவ- 06,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) கீழ் இயங்கி வரும் எஸ்.எஸ்.நாயுடு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட செல்லும் வாடிக்கையாளர்களுக்கு அளவு குறைவாக தரமற்ற பெட்ரோல் வழங்குவதாகவும் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்கும் போது அங்குள்ள மேலாளர் பெண் பணியாளர்களை வைத்து வாடிக்கையாளர்களை தகாத வார்த்தைகளாக பேசுவதும் அநாகரிகமான நடந்து கொள்வதும் வாடிக்கையாக உள்ளது இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லாததால் நேற்று பாதிக்கப்பட்ட நபர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.