ஊட்டி. மார். 02.
ரெப்கோ வங்கியின் தலைவர்கள் மீது மோசடி குறித்து நீலகிரி மாவட்டம் முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ரெப்கோ வங்கி தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வங்கியாகும் .
இலங்கை பர்மா வியட்நாம் நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமகூடலூர்க்காக வங்கி மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். தாயகம் திரும்பிய தமிழர்களை அ. வகுப்பு உறுப்பினராக பதிவு செய்து கல்வி மற்றும் தொழில் சார்ந்த கடன் உதவிகள், இலவச மருத்துவ நிதியுதவி ஆகியன செய்யப்பட்டு வருகிறது. வங்கி மூலம் இந்த ஆண்டு கூடலூர் பகுதி அரசு பள்ளிகளுக்கு கழிவறை கட்டிக் கொடுக்க இவ் வங்கியின் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராஜ் மற்றும் ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் கூடலூர் வங்கி பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன் ஆகியோர் மூலம் நிதி பெறப்பட்டு அந்த நிதியில் இருந்து தரமற்ற கழிவறைகள் கட்டி ஒரு கோடி ரூபாய்க்குமேல் வரை கையாடல் செய்ததாக முன்னாள் கூடலூர் பேரவை பிரதிநிதிகள் சார்பில் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக வங்கியை சேர்ந்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மற்றும் தாயகம் திரும்பிய மக்களால் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இவர்கள் மீது மோசடி புகார் குறித்த விசாரணை உள்ள நிலையில் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் குறித்து நீலகிரி மாவட்டம் முழுக்க மோசடி குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் ரெப்கோ வங்கி தலைவர்கள் மூலமாக