நாகர்கோவில் – டிச – 09,
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த காக்கமூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதியின் தாயார் பகவதி அம்மாளின் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சட்ட உதவி மையம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த காக்கமூர் பகுதியில் வைத்து
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதியின் தாயார் தெய்வத்திரு பகவதியம்மாள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
நேற்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரை சுசீந்திரம் பைப்பாஸ் சாலையில் அமைந்துள்ள பழனி கணபதி சட்ட உதவி மைய அலுவலகத்தில் வைத்து பூதப்பாண்டி முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்
வழக்கறிஞர். பலவேசமுத்து , உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பழனி கணபதி ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
வழக்கறிஞர் தில்லை நாதன் வரவேற்புரை ஆற்றினார் ,
வழக்கறிஞர்கள் ஜானி, பாபு, செந்தில்நாதன், எஸ். எம்.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராஜன் கலந்து கொண்டார் .
நடைபெற்றது முகாமில் டாக்டர். ஆயிஷா, மற்றும் டாக்டர். செர்லின் ஆகியோர் பயணாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். மருத்துவர்களின் பரிந்துரையின் படி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன மருத்துவர்களின் அறிவுரையின்படி இசிஜி இரத்த பரிசோதனைகள் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக பரிசோதிக்கப்பட்டது முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற தேவை படுபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைகள் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதி சட்ட உதவி மையம் சார்பாக வழங்கினார். உடன் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல் வேறு கிராமங்களில் இருந்தும் சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு தேனீர், மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.