தென்காசி மாவட்டத்தில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என் .ரவி பங்கேற்கிறார்
தென்காசி மாவட்டத்தில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி சங்கரன்கோவிலில் வருகிற ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையத்தில் பேரணி தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான திருவேங்கடம் ரோடு யுபிவி மைதானத்தில் நிறைவடைகிறது
தென்காசி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் வருகிற ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது இந்த பேரணியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்
தென்காசி மாவட்டத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்காக போதை இல்லா தென்காசி எனும் வரலாற்று சிறப்புமிக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது
போதையற்ற இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு போதை இல்லா தென்காசி என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பேரணியில் மக்களோடு மக்களாக நடந்து பொதுக்கூட்டத்தில் விழா பேரூரை ஆற்றுகிறார். மேலும் அவர்களோடு சோஹோ மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்த போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் வருங்கால இளைஞர் மற்றும் மாணவர்களிடம் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி பங்கேற்க்க கூடிய இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். நாடு வளர்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கும் வேலையில் வளர்ச்சியை கெடுக்கும் விதமாக போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டில் போதை பொருட்களின் தலைமையிடமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த வருடம் மட்டும் 3 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தை சுத்தம் செய்த ஆளுநர் மதுபாட்டில்கள் கிடந்ததை கண்டு மன வருத்தத்தோடு அவர் பேசியதில் அரசியல் இல்லை. நியாயமான கருத்தை கூறியுள்ளதாக தெரிவித்தார்.
போதை ஒழிப்பு பேரணிக்கான ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.