தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும் என அமைச்சரிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் செழியனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
தென்காசி மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தனியாக பிரித்து உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளும், சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களும் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் 8 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது .ஆனால் அரசு பாலிடெக்னிக் எதுவும் இல்லை. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் மட்டும் ஒரு அரசு பாலிடெக்னிக் இருக்கிறது .
தென்காசி மாவட்டத்திற்கு அரசு பாலிடெக்னிக் வேண்டுமென்று பலமுறை மனு கொடுத்துள்ளோம் எங்கள் மாவட்டத்திற்கு பாலிடெக்னிக் வழங்கும் பட்சத்தில் ஆலங்குளம்,பாவூர்சத்திரம்,தென்காசி, கடையநல்லூர் போன்ற இடங்களில் போதுமான அரசு நிலம் உள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டில் தென்காசி மாவட்டத்திற்கு அரசு பாலிடெக்னிக் வழங்கிட வேண்டும்
என்று தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் வரும் நிதி ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அப்போது மாவட்ட அவை தலைவர் சுந்தரமகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை. முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வக்கொடி ராஜாமணி, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உடனிருந்தனர்.