தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் கடையநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளின் கூட்டம் மறவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடையநல்லூர் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவது சம்ந்தமாக ஆலோசிக்கப்பட்டது மற்றும் பொதுமக்களின் நலன் கருதி வியாபாரிகள் அவர்களின் கடைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு வியாபாரிகள் மற்றும் நகர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



