கன்னியாகுமரி ஆக 1
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சத்யா நகரில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு நாய் தவறி விழுந்தது. விழுந்து உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டு இருந்த அந்த நாய் கிணற்றினுள் இருந்த படிக்கட்டில் ஏறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த திமுக பேரூர் துணை செயலாளரும், சமூகசேவகருமான ஆட்டோ சொர்ணப்பன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்தார்.
கரையில் வந்ததும் அந்த நாய் தன்னை காப்பாற்றிய அவருக்கு நன்றி சொல்லும் விதமாக வாலை ஆட்டிக் கொண்டு அவர் மீது தனது பாசத்தை வெளிப்படுத்தியது. இவரின் இந்த மனிதாபிமான செயலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.