வேலூர்_08
திருவலம் அடுத்த பெரிய ராமநாதபுரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (31) கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை பெரிய ராமநாதபுரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சீராஜபுரத்தில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு வருவதற்காக சென்றுள்ளார் அப்போது ஈபி கூட்ரோடு ராமநாதபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த கார் புருஷோத்தமன் இருசக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் புருஷோத்தமன் வலது காலில் காரின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது இதில் கால் எலும்பு நெருங்கியுள்ளது
இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காலிலும் முகத்திலும் அடிபட்டிருந்தது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புருஷோத்தமனுக்கு வலது கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புருஷோத்தமன் மனைவி ஷோபா திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரியின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திச் சென்ற கொடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த உதயா என்ற நபரை தேடி வருகின்றனர்.