கன்னியாகுமரி வனக்கோட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட மருங்கூர் பகுதியில் கனகராஜ் என்பவர் குரங்குகள் தொல்லை தொடர்பாக மனு அளித்ததன் பேரில் மாவட்டவன அலுவலர் மற்றும் வன காப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையில் குரங்குகளை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர்கள் திரு. பிரவீன், ராஜா ஆகியோர் உதவியுடன் மேற்படி இடத்தினில் 5 நாட்டு குரங்குகள் பத்திரமாக பிடிக்கப்பட்டு வனச்சரக அலுவலர் அவர்களின் உத்தரவுப்படி பொய்கை அணை வனப்பகுதியில் பிடிப்பட்ட குரங்குகளை பத்திரமாக விடுவிக்கப்பட்டது



