இரணியல், செப். 5 –
இரணியல் ஆற்றுபாலம் ரயில் தண்டவாளத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒரு ஆண் பிணம் கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு உடனே நாகர்கோவில் ரயில்வே போலீஸ் தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது உடல் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகவும், கால் நசுங்கியும் காணப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் ரயில் தண்டவாளத்தில் படுத்து அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பிணம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த விவரம் தெரியவில்லை. அவருக்கு 35 வயது இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


