By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: September 1, 2025 10:53 am
September 1, 2025
77 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 01 –

கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுசீலா பாய் தலைமை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி வழங்கப்பட வேண்டும். இதை இலக்காக கொண்டுதான் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உழைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்கள் பங்களிப்பும் அவசியம் ஆகும். மாணவர்கள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கி இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்தில் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார்.

2020-2023 ம் கல்வியாண்டில் பயின்ற வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவில் 36 மாணவர்கள், வணிகவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்கள், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 32 மாணவ, மாணவிகள், பொருளியல் பாடப்பிரிவில் 35 பேர், ஆங்கிலம் பாடப்பிரிவில் 41 பேர், வரலாறு பாடப்பிரிவில் 29 பேர், கணிதவியல் பாடப் பிரிவில் 29 பேர், இயற்பியலில் 40 பேர், புள்ளியியல் பாடப்பிரிவில் 25 மாணவ, மாணவிகள் என மொத்தம் 314 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பொருளியல் துறையை சேர்ந்த மாணவிகள் ஷபீகா, சங்கரி ஆகியோர் பொருளியல் முதன்மை பாடப்பிரிவில் பல்கலைக்கழக தேர்வின் தர வரிசை பட்டியலில் முறையே 4 மற்றும் 15-வது இடத்தை பிடித்தனர். புள்ளியியல் துறையை சேர்ந்த மாணவிகள் அகாலின் ஜோதி, ஆஷிகா டார்வின், அனுஷியா ஆகிய மாணவி கள் புள்ளியியல் முதன்மை பாடத்தில் பல்கலைக்கழக தேர்வின் தர வரிசை பட்டியலில் முறையே 1, 2, 3 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர். இயற்பியல் துறையை சேர்ந்த மாணவி வசந்தி, பல்கலைக்கழக அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். வரலாற்று துறையை சேர்ந்த சுபாஷினி ராய் என்ற மாணவி பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் 9-வது இடம் பிடித்தார். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியினை கல்லூரி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் கூவினு, உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஷாகுல் ஹமீது, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜோதிரவீந்திரன், விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் அல்டஸ் ஜே. கக்ஸ்லி, வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெயசிங் ஜெபக்கனி, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பென்னட் ராஜேஷ் மற்றும் பத்மஸ்ரீ, ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் டோனிஷ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது
இறச்ச குளம் மலைப் பகுதியில் காட்டு தீ
இரட்சணையசேனை பேராலய நுழைவு வாயில்
இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழகப்பபுரதில் தண்ணீர் பந்தல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மிடாலக்காடு அரசு நூலக வட்ட புத்தக கண்காட்சி

January 29, 2025
125 Views
சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
கழக பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி
ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்காக சிறப்பு வார்டு தயார்
வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) மாநில நிர்வாகிகள் பதிவேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account