மதுரை, ஆக. 28 –
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சி கட்டப்புளி கிராமத்தில்
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் பணியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார் நேரில் சென்று பார்வையிட்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் 400 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தில் முதற்கட்டமாக 72 மாற்றுத் திறனாளிகள், 37 திருநங்கைகள், 85 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.



