திருப்பூர், ஆகஸ்ட் 15 –
திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டில் இரண்டாம் மண்டலத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரிப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்து வைக்குமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். இறுதியில் அப்பகுதியின் பொதுமக்களுக்கு குப்பைகளை பிரிப்பதற்கு இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கப்பட்டது.



