சென்னை, ஆகஸ்ட் 12 –
சென்னையைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் கேப்ரியோ அக்னி 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். மூன்று வயது முதலே சின்ன சின்னப் பொருட்களை வரையத் தொடங்கிய போதே பெற்றோர் அவரது ஆர்வத்தை கண்டறிந்துள்ளனர்.
கேப்ரியோ அக்னி மற்ற குழந்தைகளைப் போல ரீல்ஸ் பார்ப்பதிலோ, ரைம்ஸ் பார்ப்ப்பதிலோ ஆர்வம் காட்டாமல் ஓவியங்களை வரைவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை ஆர்வமாகப் பார்த்து சுயம்புவாக ஓவியங்களை வரைய ஆரம்பித்துள்ளார். எதைப் பார்த்தாலும் அதை அப்படியே வரைந்து விட வேண்டும் என்கிற ஆர்வம் புதிய புதிய ஓவிய முறைகளை வரைவதற்கு கேப்ரியோவிற்கு உந்துதலாக மாறியுள்ளது.
பென்சில் ஓவியம் வரைய ஆரம்பித்து, காந்தம் வைத்து ஓவியம் வரைவது, பெண்டுலம் வைத்து ஓவியம் வரைவது என புதியனவற்றா கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளார்.
பள்ளி அளவிலான ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி அனைத்து விதமான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு தன் திறமையை வெளியுலகு தெரிவித்தார். சமீபத்தில் வேல்ஸ் குளோபல் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடம் பிடித்து ரூ.10ஆயிரம் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் முனைப்பில் 50க்கும் மேற்பட்ட பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றுள்ள கேப்ரியோ அக்னி இந்திய உலக சாதனைப் புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், லண்டன் உலக சாதனைப் புத்தகம் என பல்வேறு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று 15 உலக சாதனையை படைத்துள்ளார்.



