ராமநாதபுரம், ஆக. 5 –
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக – மமக மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் பனைக்குளத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமையில் நடைபெற்றது. தமுமுக – மமக மாவட்ட பொருளாலர் பனைக்குளம் ஹசன் இறைவசனம் ஓதி கூட்டத்தை துவங்கி வைத்தார். தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித்அஸ்ஸாம் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான தொண்டி சாதிக் பாட்ஷா கலந்து கொண்டு மாவட்ட நிர்வாக மேம்பாடு தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.
தலைமையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மாநாட்டு தீர்மான விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என்றும், தமுமுக 31 வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, தமுமுக – மமக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி அதிகமான உறுப்பினர்களை இணைப்பது,
தேவிபட்டனத்தில் மீனவர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் மீனவ மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் அவர்கள் கடற்கரை வந்தவுடன் அவர்களின் பொருட்களை சோதனை என்ற பெயரில் அவர்களின் நேரங்களை வீணடிக்கும் விதமாகவும் மன உளச்சல் உண்டாகும் விதமாகவும் மீனவர்கள் மீது கடல் அட்டை சம்பந்தமான வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டும் போக்குடன் வனத்துறை அலுவலர்கள் நடந்து கொள்வது சரியான போக்கல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் மீனவர்கள் நலன் கருதி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழக முதல்வருக்கும் மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மமக மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, தமுமக மாவட்ட துணை செயலாளர் தேவிபட்டிணம் ராவுத்தர், மண்டல செயலாளர் பஹத் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்சர், மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் கமால், மாணவர் அணி செயலாளர் யாசிர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் தீர்மான தொகுப்பு கையேடும், தலைவர் பேராசிரியர் அவர்களின் மாநாட்டு தலைமை உரை கையேடும் மாவட்ட நிர்வாகிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க கொடுக்கப்பட்டது. பனைக்குளம் முகவை மண்டல மாணவர் அணி நிர்வாகி பகத் நன்றி கூறினார்.