வேலூர், ஆகஸ்ட் 04 –
வேலூர் மாவட்டம் மேலூர் அடுத்த தொரப்பாடியில் ஜீத் குனே டோ புரூஸ்லீ தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கும் இன்டார்நேசனல் தற்காப்பு கலை தமிழ்நாட்டில் 2-வது இடமாக வேலூரில் ஆரம்பிக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் MMA கலப்பு தற்காப்பு கலைகள், JKD சுய பாதுகாப்பு நுட்பங்கள், வில்பவர் மேம்பாட்டு பயிற்சி, எடை இழப்பு பயிற்சி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயிற்சிகள் அனுபவம் மிக்க மாஸ்டர்களால் பயிற்றுவிக்கின்றனர்.
இவ்விழாவில் வேலூர் உடற்பயிற்சி மையம் இயக்குனர் உமாசங்கரி, லட்சுமி நாராயணன் மற்றும் சிறப்பு விருந்தினர் கவுன்சிலர் பாபி கதிரவன், நேஷனல் செயலாளர் மாஸ்டர் புரூஸ்லி ராஜ், தமிழ்நாடு மாநில செயலாளர் கண்ணன், நேஷனல் செயல்பாடு தலைவர் போரா மற்றும் கேரளா, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.