விழுப்புரம், ஆகஸ்ட் 03 –
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
அந்த வகையில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம் ஜன்மன் திட்டத்தின்கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் குடியிருப்பு வீடுகளின் கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டதுடன். 2024 – 2025 ஆம் ஆண்டில் வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறியப்பட்டது.
மேலும், 2025 2026-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதிய குடியிருப்பு வீடு கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தஜெ.இ. பத்மஜ ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.கே. கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.