தருமபுரி, ஆகஸ்ட் 3 –
தருமபுரி மாவட்ட கால்நடை துறையின் சார்பில் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, பெல்ஜியம், மின் பின், லேப ரெட் ஸ்பியர்ஸ், பொமேரியன், டாபர்மேன் உள்பட 35 வகையான நாய்கள் பங்கு பெற்றன. இதில் சிறந்த நாய்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு வெறி நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மரிய சுந்தர், துணை இயக்குனர் ராஜேந்திரன், வெற்றிவேல், உதவி இயக்குனர்கள் சரவணன், கனக சபை ரவிச்சந்திரன், வெற்றிவேல் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் செய்திருந்தனர்.