வாலிபாளையம், ஆகஸ்ட் 03 –
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைகள் வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் செ. தாமோதரன்,
கே.என். விஜயகுமார் ஆகியோர் பூத் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசாமி, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், பகுதி கழக செயலாளர்கள் கேசவன், கண்ணன், ஹரிஹரசுதன், கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர் சின்னச்சாமி, மாவட்ட மகளிரனி செயலாளர் சுந்தராம்பாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி, பகுதி துணைச் செயலாளர் பெஸ்ட் ஜீவானந்தம், வட்டக் கழக செயலாளர்கள் கண்ணுசாமி, முத்து, அவினாசியப்பன், அனீபா, ராஜா, கௌதம், சண்முக பிரசாத், கோபால், ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிலம்பரசன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஹரி பிரசாத் மற்றும் மாவட்ட பூத் கிளை செயலாளர்கள், பாக நிலை முகவர்கள் (BLA-2), சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.