வேலூர், ஜூலை 1 –
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் செதுவாலை கிராமம் 4-வது வார்டில் முத்தரையர் குலத்தினர் சார்பில் கன்னி அம்மன் ஆலயத்தில் வாழையடி வாழையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கன்னி அம்மன் குல தெய்வம் வழிபாடு திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், பம்பை வர்ணிப்பும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும், முன்னாள் கவுன்சிலர் செதுவாலை ஊர் நாட்டாண்மை கே.எம். வெள்ளை தலைமையிலும் கோவிந்தசாமி, சின்ன ராஜி, தூரி, மோகன், விநாயகமூர்த்தி, மகி, மூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள், செதுவாலை ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.