தேவகோட்டை, ஜூலை 31 –
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருமண வயல் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் 100 நாள் வேலை ஜாதி பார்த்து வேலை போடுகிறார். கலைஞர் வீடு திட்டத்தில் வீடு கேட்பவர்களுக்கு தராமல் வசதி படைத்தவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதாகவும்
இது குறித்து கிராம சபை கூட்டத்திலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு அளித்தும் இவர் மீது தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கோட்டூர், பொன்னத்தி, சிறுவத்தி கிராம மக்கள் கையில் பதாகை ஏந்தி உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்து தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமியிடம் செந்தில்குமார் மீது புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.