சிவகங்கை, ஜூலை 31 –
சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அரசனூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமினை சிவகங்கை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர், கண்டாங்கிபட்டி பெ. மந்தக்காளை , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட திமுக மகளிரணி செல்வராணி அய்யப்பன், வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
13 அரசுத்துறை பங்கேற்கும் இந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 43 க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.