மதுரை, ஜூலை 31 –
மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ல் மாநகராட்சி பழைய அலுவகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் உள்ளனர்.