சேலம், ஜூலை 31 –
சேலம் மாவட்டத்தில் அமாளிகொண்டலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முகாமில் 70 வயது மூதாட்டி இலவச வீட்டு மனை வேண்டி மனு செய்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் சேலம் தெற்கு தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் துணை தாசில்தார் கங்கா பிரியதர்ஷினி ஆகியோர் இந்த மனுவை ஏற்று உடனடி நடவடிக்கையாக இந்த மூதாட்டிக்கு ஒரு மணி நேரத்தில் இலவச வீட்டு மனை பட்டாவை திமுக சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மூதாட்டி இடம் வழங்கினார். உடனடியாக மூதாட்டிக்கு பட்டா வழங்கிய அமாளி கொண்டலாம்பட்டி மக்கள் நன்றி தெரிவித்தனர்.