தூத்துக்குடி, ஜூலை 31 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் வருவாய்துறை சார்பில் பயனாளிகளுக்கு முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், விதவைச் சான்றிதழ் மற்றும் பேரூராட்சி சார்பில் சொத்து வரி பெயர் மாற்றுதல் ஆணை, மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உஷா, விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், வேலுச்சாமி உட்பட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.