சென்னை, ஜூலை 29 –
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, நா. எழிலன், நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் தலைவர் டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் முனைவர் எஸ். அனி கிரேஸ் கலைமதி, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் துணைத் தலைவர் முனைவர் அனி ராஜா மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.