ராமநாதபுரம், ஜுலை 29 –
ராமநாதபுரம் நூற்றாண்டு கண்ட இராஜா மேல்நிலைப் பள்ளியில் 93-ம் ஆண்டு
11 மற்றும் 12 வகுப்பு பள்ளி மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலமுருகன் தலைமை வகித்தார். உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் தாவரவியல், உடற்பயிற்சி, விலங்கியல், வணிகவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
32 ஆண்டு காலம் கழித்து அவர்களுடைய பழகிய நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனம் விட்டு பேசிய ஒரு நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களால் முடிந்தளவு தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற அடிப்படையில் “என் பள்ளிக்கு என்னால் பெருமை சேர்க்க முடியும்” என்ற ஒரு வாக்கியத்தின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் எங்களால் முடிந்த உதவியினை பள்ளிக்கு செய்து தருவதாக நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.