ராமநாதபுரம், ஜுலை 29 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் செய்யது முகமது கான் சாஹிப் திடலில் நடைபெற்றது. இப்போட்டியை தொண்டி காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் முன்னாள் விளையாட்டு வீரர்கள் சாதிக்பாட்சா நவ்பல் ஆதம், ஆதில் இர்ஷாத், அப்துல் நசிர், அஸ்பாக் அபு, செல்வ குமார், அபி ஆகிய முக்கிய பிரமுகர்கள் விளையாட்டுபோட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் 32 க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகள் பங்கு பெற்றன. தொண்டி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், பனைக்குளம், பெரியப்பட்டினம், மேலக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், காரைக்குடி, ராமேஸ்வரம், இளையாங்குடி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான கால்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 15,000 பெரிய பட்டினம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு பொறியாளர் சபியுல்லா வழங்கினார். சுழற்கோப்பை தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சாதிக்பாட்சா புஹாரி டிராவல்ஸ் சார்பாக வழங்கினார். இரண்டாவது பரிசு தொண்டி காரைக்குடி கால்பந்தாட்ட அணி வென்றனர். இர்ஷாத் அஹமது சுழற்கோப்பை நவ்பல் ஆதம் பேரூராட்சி தலைவர் சார்பாக வழங்கினார். மூன்றாவது பரிசு ராமேஸ்வரம் கால்பந்தாட்ட அணியினருக்கு தமிழன் சூப்பர் மார்கெட் அப்துல்லா வழங்கினார். சுழற்கோப்பை திமுக நகர் செயலாளர் இஸ்மத் நானா வழங்கினார். நான்காவது பரிசு தொண்டி கால்பந்தாட்ட அணியினருக்கு மண்ணடி மறைக்கா சுழற்கோப்பை முன்னாள் கால்பந்து வீரர் அப்துல் நசீர் வழங்கினார்.