வேலூர், ஜூலை 29 –
வேலூர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ஆ. துரைப்பாண்டி தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வ. மாரிமுத்து, மாநில பொதுச் செயலாளர் ப. தேசிங்குராஜன் ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் மாநில தேர்தல் மற்றும் முக்கிய தீர்மானங்கள் செயல்முறைப்படுத்த தலைவருக்கு பங்கேற்றவர்கள் முன்னிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது மாநில பொருளாளர் பத்மினி மில்லர், மாநிலத் துணைத் தலைவர் வே. மகேந்திரகுமார், ஆலிஷ் சீலா, பகவதியப்பன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.