நாகர்கோவில், ஜூலை 28 –
நாகர்கோவில், கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டமும் கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமினை நேற்று நாகர்கோவில் அரசுக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் மு. சுசீலாபாய் தலைமை உரையாற்றினார். மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் டி. ஆனி சோபியா ரெக்ஸின், மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் மாணவிகளுக்கு ஏற்படக்கூடிய பாலியல் மற்றும் உளவியல் சார்ந்த கொடுமைகள் அதிலிருந்து சட்டத்தின் மூலமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள சட்ட தகவல் மையம் அதன் மூலம் மாணவர்களுக்குப் போதிய ஆலோசனைகள் வழங்கப்படுவது குறித்து அதற்கான அமைப்பினை அரசு மாவட்ட நீதிமன்றங்களில் தொடங்கி முன்னெடுத்து வருவதையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் விழிப்புணர்ச்சி நிகழ்வை ஏற்படுத்தும் விதத்திலும் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் த.அஜி அனைவரையும் வரவேற்றார். கணினி அறிவியல் துறை மாணவன் கார்த்திக் நன்றி கூறினார்.