திருமங்கலம், ஜூலை 26 –
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி புனித இருதய துவக்கப்பள்ளி நடைபெற்ற மாணவ, மாணவியர்களின் அறிவியல் மற்றும் தனித்திறன் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு பாராட்டினர். திருமங்கலம் அருகே கள்ளிக்குடி புனித இருதய துவக்கப்பள்ளியில் தமிழ் ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் கீழ் மாணவ மாணவியர்களின் தனித்திறன் கண்காட்சி நடைபெற்றது.
தமிழ் பாடத்தில் தமிழரின் பழைய பண்பாடு, பழக்கவழக்கம், ஆங்கில புலமை, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள், சமூக அறிவியலில் வரலாற்று நிகழ்வுகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் திறன் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. பள்ளியின் தாளாளர் பெரியசாமி, சபையின் பொருளாளர் அருள், பள்ளியின் முதல்வர் காளீஸ்வரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கிவைத்தனர்.
இதில் தனித்திறன் கண்காட்சியை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் கண்டுகளித்தனர். சிறப்பாக படங்களை வரைந்த, செயல்வடிங்களை செய்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக டைப்ரைட்டிங் வகுப்பினை சபையின் பொருளாளர் அருள் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் சதீஷ், ரமேஷ், மணிகண்டன், சிஸ்டர்ஸ் விக்டோரியா, ஜார்ஜி, எலிசபெத் ராணி, ஸ்டெல்லா, கிறிஸ்டி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.