தென்காசி, ஜூலை 26 –
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சாரல் திருவிழாவின் 5-வது நாள் திருவிழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஐந்தாவது நாள் சாரல் திருவிழா நிகழ்ச்சியாக மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டியும், சிவகிரி ஸ்டெல்லா மெட்ரிக் பள்ளி, பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி ஐ.சி.ஐ. தொடக்கப்பள்ளி, மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகளும், கலை பண்பாட்டுத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் பண்பொழி மாரியம்மாள் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், சுற்றுலாத்துறையின் சார்பில் சென்னை வேம்பு கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சாத்தூர் முத்துமாரி குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், கரிவலம்வந்த நல்லூர் விடிவெள்ளி குழுவினரின் மல்லர் கம்பம் நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறையின் சார்பில் சென்னை ஸ்ரீ யமுனா நாட்டியாஞ்சலியினரின் பரத நாட்டியம் நிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், திருப்பத்தூரான் சேவியர் கலைக்குழுவினரின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சியும், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் டெய்சி, களந்தை ஜெயராம் ஆகியோரின் நெல்லை ஆனந்தராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.