கொல்லங்கோடு, ஜூலை 24 –
கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கண்ணனாகம் சந்திப்பு முதல் மேட விளாகம் வரை வடிகால் அமைக்க வேண்டும். நகராட்சிக்குட்பட்ட கண்ண விளாகம், மேட விளாகம், கச்சேரி நடை பகுதிகளில் நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும். பொது மக்களின் வசதிக்கேற்ப நவீன வசதியுடன் புதிய பேருந்து நிலைய அமைத்து தர வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும். ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைத்திட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கொல்லங்கோடு வர்த்தக சங்கத் தலைவர் கோபன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி மனோகரன் வரவேற்றார். வர்த்தக சங்க செயலாளர் ஹரிகுமார், துணைத்தலைவர் தாமோதரன், சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.