மதுரை, ஜூலை 24 –
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நகர் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா. பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, மதுரை நகர் அரிமா சங்கத் தலைவர் ராமசந்திரன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் அபுதாஹிர், துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்ப்பின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், செய்யது முகமது யூசுப் மற்றும் சண்முக சுந்தரம் ஆகியோர் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.